கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தஞ்சம் அடைந்த காதல்ஜோடி
தஞ்சம் அடைந்த காதல்ஜோடி
Published on

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் பகுதியில் வசிப்பவர் கனகராஜ். இவருடைய மகள் சினேகா (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் வேலை பார்த்து வருகிறார். 

அதே நூல் மில்லில் காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுவஸ்திக் ராஜ் (27) என்பவர் பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்தனர். ஆனால் இருவீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறி வடசென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேற்று கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 

கெங்கவல்லி சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் இரு வீட்டாரையும் அழைத்து பேசி சமாதானம் செய்த பின்பு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com