குள்ளனம்பட்டி அருகே வக்கீலை தாக்கிய தம்பதி கைது

குள்ளனம்பட்டி அருகே வக்கீலை தாக்கிய தம்பதியினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே என்.ஜி.ஓ. காலனியில் உள்ள கே.ஆர்.நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). வக்கீல். இவருக்கும், ரெங்கநாதபுரத்தை சேர்ந்த சரவணன் (49) என்பவருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கண்ணன் கே.ஆர்.நகருக்கு வந்தார். 

அப்போது சரவணனும், அவரது மனைவி கணபதிராஜமும் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் கண்ணனை அவர்கள் தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனையும், கணபதிராஜத்தையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com