நாமக்கல்லில் ரூ.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 3,500 மூட்டை பருத்தி ரூ.75 லட்சத்துக்கு ஏலம் போனது.
நாமக்கல்லில் பருத்தி ஏலம் நடைபெற்றபோது எடுத்த படம்.
நாமக்கல்லில் பருத்தி ஏலம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 3 ஆயிரத்து 500 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.75 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 825 முதல் ரூ.6 ஆயிரத்து 70 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.6 ஆயிரத்து 190 முதல் ரூ.6 ஆயிரத்து 390 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.7 ஆயிரத்து 290 முதல் ரூ.7 ஆயிரத்து 450 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

குளிர்கால பருத்தி சீசன் தொடங்கி இருப்பதால், பருத்தி மூட்டைகளின் வரத்து அதிகரித்து இருப்பதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com