தள்ளுபடியாகாத கடன் விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்- பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் 31.3.2016-ல் நிலுவையில் உள்ள தள்ளுபடி செய்யப்படாத இதர விவசாயிகளின் பயிர்க்கடன்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
பயிர்க்கடன்
பயிர்க்கடன்
Published on

சென்னை:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனில் மத்திய கால கடன்களாக மாற்றப்பட்ட கடன்கள் பல விவசாயிகளுக்கு இன்னும் தள்ளு படி ஆகாமல் உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வில்வசேகரன் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர்களுக்கு (சென்னை நீங்கலாக) அனுப்பி உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் 31.3.2016-ல் நிலுவையில் உள்ள தள்ளுபடி செய்யப்படாத இதர விவசாயிகளின் பயிர்க்கடன்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு 31.1.2021 அன்று நிலுவையில் இருந்த கடன்கள் பற்றிய விவரங்களையும் அசல், வட்டி, அபராத வட்டி, இதர செலவுகளின் விவரங்களை முழுமையாக பெற்று விவரமாக பட்டியலிட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com