திருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

வருகிற மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நடக்கிறது. 

மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது. 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வந்தனாகர்க், காயத்ரி சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, லட்சுமி, நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com