வீடு கட்டுவதில் தகராறு: அண்ணனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திருவாரூர் அருகே வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
காமராஜ்
காமராஜ்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கண்டிஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது55). இவருடைய தம்பி காமராஜ்(50). தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி இவர்களுடைய பூர்விக சொத்தில் உள்ள இடத்தில் வீடு கட்டுவதில் அண்ணன்- தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த காமராஜ், தனது அண்ணனை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கிருஷணமூர்த்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவாரூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீ்ர்ப்பு கூறப்பட்டது. இதில் அண்ணனை கொலை செய்த காமராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com