சங்கராபுரம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்

சங்கராபுரம் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி கடத்தல்
மாணவி கடத்தல்
Published on

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கல்லூரியில் ஆன்லைன் மூலம் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டதாகவும், இதற்கு அதே ஊரை சேர்ந்த ஏழுமலை, சஞ்சய், அருள்பாண்டியன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து மாணவியையும் அவரை கடத்தி சென்றவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com