விருதுநகரில் கல்லூரி மாணவி கடத்தல்- வாலிபர் மீது புகார்

விருதுநகரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக வாலிபர் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல்
கடத்தல்
Published on

விருதுநகர்:-

விருதுநகர் அருகே உள்ள வரலொட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் பிரீத்தி (வயது 19). இவர் அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பிரீத்தி கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். அதன் பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசில் பாண்டி புகார் செய்தார். அதில், பாண்டியன் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பிரீத்தியுடன் பழகி வந்ததாகவும், அவர் தான் தனது மகளை கடத்தி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரீத்தியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com