வருசநாடு அருகே சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவர் கைது

வருசநாடு அருகே சிறுமியை திருமணம் செய்த கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கடமலைக்குண்டு:

வருசநாடு அருகே நந்தனார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகன் சரவணன் (வயது 19). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பெற்றோர்கள் கண்டித்தனர். இதற்கிடையே சரவணனும், அந்த சிறுமியும் கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வந்தனர். இந்தநிலையில் சரவணன், அந்த சிறுமியை திருமணம் செய்து தூத்துக்குடியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சரவணனையும், சிறுமியையும் விசாரணைக்காக வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியை திருமணம் செய்ததற்காக சரவணன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட சிறுமியை தேனியில் உள்ள காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com