நாமகிரிப்பேட்டை அருகே சிறுமி கடத்தல் - கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

நாமகிரிப்பேட்டை அருகே சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கல்லூரி மாணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆயில்பட்டி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் தங்கள் மகளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உமையாள்புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பாலு (வயது 22) என்பவர் கடத்தி சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து மகளை மீட்டு தர கோரியும் ஆயில்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி விசாரணை நடத்தி 2 பேரையும் தேடி வந்தார். இந்தநிலையில் நாமகிரிப்பேட்டை அருகே காட்டூர் பகுதியில் பாலு மற்றும் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டதோடு அவரை கடத்தியதாக கல்லூரி மாணவர் பாலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் சிறுமி பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com