ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவி கடத்தலா?- போலீசார் விசாரணை

ஜெயங்கொண்டத்தில் கல்லூரி சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் வாசுகி(வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரி சென்ற வாசுகி மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்து பன்னீர் செல்வம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com