மாணவிக்கு காதல் தொல்லை- கல்லூரி பேராசிரியர் கைது

‘வாட்ஸ்-அப்' மூலம் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் சதீஷ்குமார் (வயது 24). இவர், சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர். இவர் வேலைபார்க்கும் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை படித்து வரும் மாணவிக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு விட்டதாக சதீஷ்குமார் போலியான திருமண பதிவு சான்றிதழை தயாரித்து, அதை ‘வாட்ஸ்-அப்' பில் பரவவிட்டு உள்ளார்.

அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த அவர், வேறு யாரும் அவரை திருமணம் செய்துவிடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com