நாளை நடைபெற இருந்த பணி பார்வையாளர் தேர்வு ரத்து- கலெக்டர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த பணி பார்வையாளர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் சிவன் அருள்
கலெக்டர் சிவன் அருள்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் பணி பார்வையாளர் இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் எழுத்து தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com