ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதனை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.
ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்த காட்சி.
ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்த காட்சி.
Published on

திருப்பத்தூர்:

ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து திருப்பத்தூர் நகராட்சி மூலம் பஸ் நிலையத்தில் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களான அர்ஜுனன், பீமன், சகாதேவன், கிருஷ்ணன் ஆகிய வேடம் அணிந்த கலை குழுவினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். தேர்தல் தாசில்தார் நவநீதம் வரவேற்றார்.

விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்துப் பேசினார். ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் வந்தனா கார்க் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துப்புரவு ஆய்வாளர் விவேக் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com