சாத்தான்குளம் பகுதியில் கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு

சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.
சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அங்கு குடிசைகளில் வசித்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு சிலருக்கு இன்னும் நிலத்தை அளவீடு செய்து வழங்கவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து இலவச வீட்டுமனை பட்டா பெற்ற அனைவருக்கும் நிலத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு கலெக்டர் செந்தில்ராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் தாமரைமொழி பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு நடத்தினார். பின்னர் 3 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, தாசில்தார் லட்சுமி கணேஷ், யூனியன் ஆணையாளர் பாண்டியராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com