குளச்சல் அருகே மீனவர் தற்கொலை

குளச்சல் அருகே மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

குளச்சல்:

குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் சிலுவை இருதயம் (வயது60), மீனவர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்த சிலுவை இருதயத்திற்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் 2-வது மகளுக்கு வருகிற 21 -ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த நிலையில் மீனவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com