புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை வெறைட்டிஹால் ரோடு, செட்டிபாளையம் ரோடு, சவுரிபாளையம், சேரன்மாநகர், சத்தி ரோடு, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக முத்துக்கிருஷ்ணன், ஆனந்தன், சேகர், ராமன், பாபு, ஆத்திகனி உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com