செல்போனை திருடியதாக சந்தேகம்- இரும்புக்கம்பியால் அடித்து முதியவர் கொலை

செல்போனை திருடியதாக சந்தேகப்பட்டு முதியவரை இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கொலை
கொலை
Published on

கோவை:

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 60) .இவர் காட்டூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கோவை வெறைட்டி ஹால் ரோடு சி.எம்.சி. காலனியை சேர்ந்த தொழிலாளி பால்ராஜ் (வயது 40). நண்பர்கள்.

இவர்கள் 2 பேருக்கும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் காட்டூர் ரங்கன் வீதியில் செல்வமும், பால்ராஜும் குடிபோதையில் இருந்தனர். அப்போது பால்ராஜின் செல்போனை காணவில்லை. அதை செல்வம் திருடி இருக்கலாம் என்று பால்ராஜ் சந்தேகப்பட்டார்.

இது பற்றி அவர், செல்வத்திடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் இரும்புக்கம்பியால் செல்வத்தை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர். செல்போன் திருடியதாக சந்தேகப்பட்டு முதியவரை, தொழிலாளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com