மது, புகையிலை விற்ற 11 பேர் கைது

மது, புகையிலை விற்ற 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை வைசியாள் வீதி, காந்தி பார்க், உக்கடம், ராமநாதபுரம், கிராஸ்கட் ரோடு 5-வது வீதி, ராம்நகர் லஜபதிராய் வீதி, சங்கனூர் ரோடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பசுபதி (வயது 21), சேசுராஜ் (33), குமரேசன் (33), விஜயபாஸ்கர் (25), பழனி (42), கேசவன் (30), ராதாகிருஷ்ணன் (30), ரமேஷ்குமார் (36) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 83 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை பி.பி. வீதி, தியாகி குமரன் மார்க்கெட், ராமகிருஷ்ணாபுரம் சிவானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக முகமது அலி (வயது 60), விஜயன் (62), சண்முகம் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com