கோவையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பிடித்ததால் பரபரப்பு

கோவையில் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு அருகே ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பிடித்ததால் பரபரப்பு
கோவையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பிடித்ததால் பரபரப்பு
Published on

கோவை:

கோவை அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு அருகே ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, நோயாளியை செவிலியர்கள் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி எரியத் துவங்கியது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். பின்னர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com