

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள கிழக்கு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 38). இவர் சேந்தமங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் குடும்பத்தினர் அவருக்கு பண உதவி செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லம்மாளின் உடலை கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.