சொக்கம்பட்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சொக்கம்பட்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தென்காசி:

சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ரோந்து பணியில் இருந்தபோது அப்பகுதியில் விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த பெரிய தெருவை சேர்ந்த ராமையா (68) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூ.11,200 மதிப்பிலான 280 கேரளா லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com