மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால்கூலித்தொழிலாளி தற்கொலை

மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் கங்கவரம் மண்டலம் தன்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரி பாபு (வயது 44), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி காந்தம்மாவுடன் தகராறில் ஈடுபடுவார். அதேபோல் 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மதுபானத்தை குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். மகளிர் சுய உதவி குழு மூலம் பெற்ற ரூ.60 ஆயிரத்தில் மது குடிக்க பணம் தர வேண்டும், எனக் கேட்டு கிரிபாபு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். ஆனால் காந்தம்மா கணவருக்கு பணம் கொடுக்க மறுத்ததுடன், கோபித்துக் கொண்டு கங்கவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு நேற்று சென்று விட்டார்.

மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த கிரிபாபு குடிபோதையில் விட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com