சித்தூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

சித்தூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா மண்டலம் செர்லோப்பள்ளி பஞ்சாயத்து தத்தாலவாரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமநாயுடு (வயது 34), விவசாயி. அவர், விவசாயப் பணிகளுக்காக பூஜாரிவான்ட்லபள்ளிக்கு வயல்வெளி வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியையொட்டி மர்மநபர்கள் காட்டுப்பன்றியை வேட்டையாட மின்வேலி அமைத்திருந்தனர். அந்த மின்வேலியில் புருஷோத்தமநாயுடு சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். குர்ரம்கொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com