மோட்டார் சைக்கிளில் வந்த நெல்லூர் வாலிபர் லாரி மோதி பலி

மோட்டார் சைக்கிளில் வந்த நெல்லூர் வாலிபர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்மகூர் பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சுலய்யா. இவரின் மகன் ஜெகபதி (வயது 27). இவர், பெங்களூருவில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஆத்மகூருக்கு வந்து கொண்டிருந்தார்.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை அடுத்த அம்மாசெருவுமிட்டா அருகில் அன்னமையா சர்க்கிள் எதிரில் வரும்போது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு லாரி திடீரென ஜெகபதியின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஜெகபதி உயிரிழந்தார். மதனப்பள்ளி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com