

சின்னசேலம்:
சின்னசேலம் அடுத்த பாண்டியன்குப்பம் கிராமத்துக்குட்பட்ட திம்மாபுரம் சுடுகாடு அருகே உள்ள குட்டையில் அந்த வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தவறி விழுந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் தீயணைப்பு வீரர்கள் குட்டையில் தவறிவிழுந்த நபரை கடந்த 2 நாட்களாக தேடியும் அவரை காணவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் குட்டையில் தவறி விழுந்த நபர் பிணமாக மிதந்தை பொதுமக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சின்னசேலம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் பிணமாக மிதந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவல்லை? இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.