சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சின்னசேலம்:

விழுப்புரம் மாவட்ட உதவி மேலாளர் பாக்கியராஜ் தலைமையிலான டாஸ்மாக் பறக்கும் படையினர் சின்னசேலம் அருகே உள்ள தகரை, கல்லாநத்தம் ஆகிய கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தகரை மூணாங்கன்னி குட்டை பகுதியில் சாராயம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, கல்லாநத்தம் ஆற்றுமேட்டில் சாராயம் விற்ற ஏழுமலை, அதேபோல கல்லாநத்தம் சுடுகாட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயத்துடன் நின்றுகொண்டிருந்த வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் பிடித்து சின்னசேலம் போலீ்ஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தலா 20 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com