சின்னாளபட்டி அருகே டிரைவர் தற்கொலை

சின்னாளபட்டி அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சின்னாளபட்டி:

சின்னாளபட்டி அருகே உள்ள பொம்மணம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 34). வேன் டிரைவர். இவர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில ஆண்டுகளில் அந்த பெண், அழகர்சாமியை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அழகர்சாமி தனது தாயாருடன் வசித்து வந்தார். இதனிடையே அவரது காதல் மனைவி கடந்த ஆண்டு வேறொருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அழகர்சாமி குடிபோதைக்கு அடிமையானார். மனைவி பிரிந்த ஏக்கம் அவரை வாட்டியது. இந்தநிலையில் நேற்று அழகர்சாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com