செட்டிப்பாளையத்தில் 2½ வயது ஆண் குழந்தை தவறி விழுந்து பலி

செட்டிப்பாளையத்தில் 2½ வயது ஆண் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

செட்டிப்பாளையம்:

பீகாரைச் சேர்ந்தவர் சந்தீப் (வயது 26). இவரது மனைவி கவிதா (24). இவர்களது 2½ வயது ஆண் குழந்தை தியானு.இந்தநிலையில் சந்தீப்பின் அண்ணன் பிரேம் என்பவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

இதனால் சந்தீப் தனது குழந்தை தியானுவை அண்ணன் பிரேமுக்கு தத்து கொடுத்தார். பிரேம் பீகாரில் இருந்து குடும்பத்துடன் கோவை வந்தார். இங்கு செட்டிப்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்துவந்தார்.

சம்பவத்தன்று தியானு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிறிய மதில் சுவர் மீது ஏறினார். அங்கிருந்து திடீரென எதிர்பாராத விதமாக தியானு தவறி கீழே விழுந்தார்.

இதில் தியானுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த தியானு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com