சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அருகே சவரப்பூண்டி மதுரைமுத்துநகரை சேர்ந்தவர் அலமேலு (வயது 70). இவர் சம்பவத்தன்று சாலையோரத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அலமேலுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com