

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமதி ஆட்சி நடைபெற்று வருகிறது. 67 வயதான சந்திரசேகரராவ் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி தனது மகன் கே.டி. ராமராவை அந்த பதவியில் அமர வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. டி.ஆர்.எஸ். கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில மாதங்களாக கே.டி.ராமராவை வருங்கால முதல்வர் என்றே பொது நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தெலுங்கானா முதல்-முதல் மந்திரியாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான்தான் நீடிப்பேன் என்று சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “நான் நல்ல நிலையில் இருக்கிறேன். இதனால் முதல்-மந்திரியாக அடுத்த 10 ஆண்டுக்கு தொடர்வேன். ஏதாவது மாற்றம் தேவையென்றால் உங்களிடம் (எம்.எல்.ஏ.க்கள்) தெரிவிப்பேன். ஆனால் சிலர் மாற்றத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறி கட்சி கட்டுப்பாட்டை மீறும் வகையில் அறிக்கை கொடுக்கிறார்கள்” என்றார்.