முத்துப்பேட்டை அருகே டிரைவரிடம் செல்போன் பறிப்பு- வாலிபர் கைது

முத்துப்பேட்டை அருகே மினிவேனை வழிமறித்து டிரைவரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவனோடை தெற்குக்காடு கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம். இவருடைய மகன் இளையராஜா(வயது32). இவர் நெல் மூட்டைகளை மினிவேனில் ஏற்றிக்கொண்டு மன்னார்குடி சாலையில் உள்ள இடைச்சிமுளை நெல் குடோனில் இறங்கி விட்டு முத்துப்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தார். கோவிலூர் கோட்டகம் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் மினிவேனை வழிமறித்த 3 பேர் இளையராஜாவின் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து இளையராஜா, முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மங்கலூர் பைபாஸ் பகுதியில் ஒருவாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முத்துப்பேட்டை அருகே உள்ள வடக்குமங்கலூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் வெங்கடேஷ் (23) என்றும் அவர் மற்றும் 2 பேர் சேர்ந்து இளையராஜாவிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெங்கடேசை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com