கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறிப்பு

கன்னங்குறிச்சி அருகே கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கன்னங்குறிச்சி:

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 30). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்து அவர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com