முகநூல் மூலம் அறிமுகமான நண்பனை அழைத்து செல்போன் பறிப்பு- 4 பேர் கைது

முகநூல் மூலம் அறிமுகமான நண்பனை அழைத்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

கொடுங்கையூர், சேலைவாயல் பகுதியில் வசிக்கும் ஐயப்பன் (22) என்பவருக்கு மாதவரத்தைச் சேர்ந்த மோனீஷ் (20) முகநூல் மூலம் நண்பரானார்.

இந்த நிலையில் மோனீஷ் அவரது நண்பர் விஜயக்குமார் என்பவரை இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைப்பதாகவும், அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து, மாதவரத்தில் சந்திக்கலாம் என ஐயப்பனிடம் கூறினார். எனவே கடந்த 21-ந் தேதி இரவு விஜயகுமார், அவரது இருசக்கர வாகனத்தில் சென்று ஐயப்பனை ஏற்றிக் கொண்டு, மாதவரம் அலெக்ஸ் நகர் மைதானத்திற்கு சென்றார்.

அப்பொழுது அங்கிருந்த மோனீஷ் மற்றும் 2 பேர் விஜய்குமாருடன் சேர்ந்து, ஐயப்பனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென 4 பேரும் கத்தியை காட்டி ஐயப்பனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீவிர தேடுதலில் ஈடுபட்டு கத்தி முனையில் செல்போன் பறித்த மாதவரம் மோனீஷ், விஜய்குமார், தினேஷ், கொடுங்கையூர் தமிழ்செல்வன் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து செல்போன், மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் மோனீஷ் மீது மாதவரம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளதும், மோனீஷ் முகநூல் மூலம் அறிமுகமான ஐயப்பனை வரவழைத்து பணம், தங்க நகைகளை பறிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com