திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு
வழக்கு
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் மேல தாழனூர் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பச்சையம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததாக மேல தாயனூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28), ராமதாஸ் (30), இளவரசன்(26), குப்பன் (31) மற்றும் பார்த்திபன் (35) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com