புதுவை ஜெயிலில் கஞ்சா வீச்சு- 4 ரவுடிகள் மீது வழக்கு பதிவு

புதுவை காலாப்பட்டு மத்திய ஜெயிலில் கஞ்சா பார்சல்கள் வீசப்பட்டது தொடர்பாக 4 ரவுடிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

சேதராப்பட்டு:

புதுவை காலாப்பட்டு மத்திய ஜெயிலில் கடந்த 18-ந்தேதி சுற்றுச்சுவர் அருகே 3 காகித பார்சல்கள் கிடந்தது.

ஜெயில் அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா, மதுபாட்டில்கள், ஊறுகாய், கருவாடு, மொபைல்போன், 100 ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த கஞ்சா மற்றும் மதுபாட்டில், மொபைல் போன் போன்றவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளான மேட்டுப்பாளையம் தமிழரசன், கிருஷ்ணா, நந்தகுமார், சசி, ஆகியோருக்கு வீசப்பட்டது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com