பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை - கீரனூர் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

பணி புரியும் இடத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Published on

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வீரகாந்தி (வயது55). இவர் கடந்த மாதம் பணியில் இருந்தபோது அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீசுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோரிடம் நேரடியாக புகார் அளித்தார். இதனை யடுத்து இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை திண்டுக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பழனி அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. சீனிவாசன் உத்தரவிட் டிருந்தார். விசாரணையில் வீரகாந்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com