கீழ்வேளூர் அருகே கார் கண்ணாடி உடைப்பு: அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

கீழ்வேளூர் அருகே கார் கண்ணாடியை உடைத்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சிக்கல்:

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் ஹாஜா நஜ்முதின் மகன் முகமது தவ்பீக். இவர் தனது குடும்பத்தினருடன் நாகூர் தர்காவிற்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

கார் கீழ்வேளூர் அரசாணிகுளம் அருகே வந்த போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கீழ்வேளூர் மெயின்ரோடு அரசாணி குளம் பகுதியை சேர்ந்த லத்திப் அலி மகன்கள் அப்துல் மாலிக் (வயது 21), ரஸ்சூல் ரகுமான் (24), அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் சத்தியசீலன் (22) ஆகிய 3 பேரும் காரை மறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டனர்.மேலும் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் மாலிக், ரஸ்சூல் ரகுமான், சத்தியசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com