திருச்சியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சியில் மனைவி பிரிந்து சென்றதால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

செம்பட்டு:

திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 24). கார் டிரைவரான இவர், திருவையாறு அருகே கண்டியூர் கிராமத்தை சேர்ந்த கனிமொழியை (22) காதலித்து 1½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு 4 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த கனிமொழி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் கார்த்திகேயன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மனைவிக்கு வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திகேயன், தான் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தனது தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றிய தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com