ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் அதே வேளையில் அங்கு பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.

குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.‌

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் ஹம்வீ நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

வெடி குண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் அந்தக் காரை ராணுவ வீரர்களின் ஒரு வாகனம் மீது மோதி வெடிக்கச் செய்தார். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

பயங்கரவாதிகளின் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com