வருமான வரித்துறை பெண் அதிகாரி கார் மோதி 4 மாத கர்ப்பிணி பலி

சென்னை வில்லிவாக்கத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியின் கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 4 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

சென்னை:

சென்னை வில்லிவாக்கத்தில் ரங்கதாஸ் காலனியை சேர்ந்த அசாருதீன் என்பவரின் மனைவியான கவுஷிபி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு விட்டு, அந்த தகவலை துணிக்கடையில் வேலை பார்க்கும் கணவரிடம் தெரிவித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். வீட்டு வாசல் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென மோதியுள்ளது. இதில் கவுஷிபி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த கார் வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவருடையது எனவும், காரை ஓட்டிவந்த பெண் விபத்தை தொடர்ந்து காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த காரை பறிமுதல் செய்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com