ஆறுமுகநேரியில் கஞ்சா விற்றவர் கைது

ஆறுமுகநேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் காயல்பட்டினம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா(வயது 65)என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com