காசோலை மோசடி வழக்கில் வணிக வரித்துறை ஊழியருக்கு 10 மாதம் சிறை

ரூ.5 லட்சம் காசோலை மோசடி வழக்கில் வணிக வரித்துறை ஊழியருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்து தேனி விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி பவர்ஹவுஸ் தெருவை சேர்ந்த தனிக்கொடி மகன் தயாளன் (வயது 36). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரிடம், கடந்த 2019-ம் ஆண்டு தேனி வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவி எழுத்தராக பணியாற்றிய லதா என்பவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். அவர் இந்த கடன் தொகைக்கு காசோலை அளித்தார். 

அந்த காசோலையை தயாளன் தனது வங்கிக் கணக்கில் செலுத்தினார். அப்போது லதாவின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி காசோலை திரும்பியது. இதற்கிடையே லதா திண்டுக்கல் வணிக வரித்துறை அலுவலகத்துக்கு பணியிட மாறுதலாகி சென்று விட்டார். 

இந்த நிலையில் தேனி நீதித்துறை நடுவர் விரைவு கோர்ட்டில் தயாளன், லதா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, நீதிபதி ரூபனா நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் லதாவுக்கு 10 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன், அவர் கடனாக வாங்கிய ரூ.5 லட்சத்தை 9 சதவீதம் வட்டியுடன் திரும்பிக் கொடுக்க வேண்டும் என்றும், திருப்பிக் கொடுக்காவிட்டால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com