திருமணமான ஒரு மாதத்தில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லை காரணமாக திருமணமான ஒரு மாதத்திலேயே இளம் தொழில் அதிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விக்ரம்
விக்ரம்
Published on

திருவொற்றியூர்:

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 29). டிப்ளமோ பட்டதாரியான இவர், விச்சூரில், தண்ணீர் பிளாண்ட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.

பங்குதாரர்களை கொண்டு தொழில் செய்து வந்த விக்ரமுக்கு, ரூ.40 லட்சம் கடன் ஆனது, கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

கடன் தொல்லையால் விரக்தி அடைந்த விக்ரம், எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள கழிப்பறையின் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விக்ரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com