அறந்தாங்கி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே கொடிவயல் வடக்கையை சேர்ந்தவர் சாந்தி (வயது 45). இவர் நேற்று ரெத்தினகோட்டையில் உள்ள அவரது அண்ணன் மகனை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் வல்லவாரி பாலம் அருகே வந்த போது சாந்தி, தனது ஊருக்கு செல்லாத வேறொரு பஸ்சில் ஏறிவிட்டதாக கூறி பஸ்சில் இருந்து அவசரமாக இறங்கினார்.

அப்போது நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்த வீராசாமியின் மனைவி லட்சுமி(வயது 40). இவரது மகள் அபி. பள்ளிமாணவி. அபியுடன், லெட்சுமியின் அக்காள் மகனான வினோத் (20) ஒரு மோட்டார் சைக்கிளில் உடையார்பாளையம் நோக்கி சென்றார்.

அப்போது பாலவேலை நடந்துவரும் பகுதியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் அபிக்கு பலத்தகாயமும், வினோத்துக்கு லேசான காயமும் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com