விபத்து
விபத்து

சங்கராபுரம் அருகே பஸ் மோதி மூதாட்டி பலி

சங்கராபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது பஸ் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு மனைவி சின்னதாயி (வயது 70). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சங்கராபுரத்தில் இருந்து கரடிசித்தூர் நோக்கி வந்த மினிபஸ் சின்னதாயி மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com