கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை

புரெவி புயல் எதிரொலியாக கொடைக்கானல் மலைப்பாதையில் இன்றிரவு 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதி
கொடைக்கானல் மலைப்பகுதி
Published on

கொடைக்கானல்:

புரெவி புயல் காரணமாக கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.  இதனால் கொடைக்கானல் மலைப்பாதையில் இன்றிரவு 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு, பழனி, அடுக்கம் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

மறு அறிவிப்பு வரும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com