திருத்தங்கலில் கட்டிட தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை

திருத்தங்கலில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சிவகாசி:

திருத்தங்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் முத்து (வயது 37). கட்டிட தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கட்டிட தொழிலாளி முத்து வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com