மேல்பாடி அருகே மகன் இறந்த சோகத்தில் கட்டிட மேஸ்திரி தற்கொலை

மேல்பாடி அருகே மகன் இறந்த சோகத்தில் கட்டிட மேஸ்திரி புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவலம்:

வேலூர் மாவட்டம் பொய்கை மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 53). கட்டிட மேஸ்திரி. ராணுவத்தில் வேலை செய்துவந்த இவரது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த ஸ்ரீதர் அவரது நண்பரை பார்க்க மேல்பாடி அருகே உள்ள திகுவப்பள்ளி என்ற பகுதிக்கு சென்றிருந்தார். அங்கும் மகன் இறந்த சோகத்தை மறக்க முடியாமல் இருந்த அவர், நேற்று அங்குள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மேல்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீதர் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com