பூதலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

பூதலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் அருகே உள்ள ராயந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குட்டி என்கிற அதியமான் (வயது31). சம்பவத்தன்று இவர் பூதலூர்மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த சீனிவாசன் (52) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பறித்ததாகவும், இதுபற்றி போலீசில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பூதலூர் போலீசில் சீனிவாசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குட்டி என்கிற அதியமானை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com